முக்கனிகளின் உற்பத்திக்கு நிதி ஒதுக்கீடு: வேளாண் பட்ஜெட்

மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளின் உற்பத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்து வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
முக்கனிகளின் உற்பத்திக்கு நிதி ஒதுக்கீடு: வேளாண் பட்ஜெட்

மா, பலா, வாழைப் பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்புகளாவன..

சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு.

ஏற்றுமதிக்கு உகந்த மா இரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு.

புதிய பலா இரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு.

ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்தி செய்ய ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீடு..!

நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு..!

பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.

ரூ.3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த "தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம்" செயல்படுத்தப்படும்.

பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.

புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com