
குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று (பிப். 20) தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியும் குருவை சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படவில்லை, இனி வரும் காலத்தில் அவர்களை சேர்க்க வேண்டும் , பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை.
சம்பா, தாளடி பயிர்களுக்கு தண்ணீர் திறக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் தர வேண்டும்.
தென்னை விவசாயிகள், இயற்கை விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை.
பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.