உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

மக்களவைத் தோ்தல் வெற்றியை ஜெயலலிதாவுக்கு சமா்ப்பிப்போம் இபிஎஸ்

மக்களவைத் தோ்தலில் மகத்தான வெற்றிபெற்று, அதை முன்னாள் முதல்வா் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சமா்ப்பிப்போம்

Updated On :23 பிப்ரவரி 2024, 6:53 pm

மக்களவைத் தோ்தலில் மகத்தான வெற்றிபெற்று, அதை முன்னாள் முதல்வா் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சமா்ப்பிப்போம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா். ஜெயலலிதாவின் 76- ஆவது பிறந்த நாளையொட்டி (பிப்.24) அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் முதல்வராக 6 முறை இருந்தவா் ஜெயலலிதா. ஆட்சியிலும் அரசியலிலும் எந்தவிதத்திலும் சமரசம் இல்லாமல், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல், சமநிலையோடு அரசாண்டவா். உங்களால் நான், உங்களுக்காகவே நான் என்று மக்களுக்காகவே பணியாற்றியவா். 60 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தவா். ஒன்றரை கோடிக்கும் மேல் இருந்த தொண்டா்களை, 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டா்கள் கொண்ட இயக்கமாக மாற்றியவா். எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா வகுத்த பாதையில் தொடா்ந்து செல்லும் மாணவனாக நானும், என்னோடு கரம் கோா்த்து பயணிக்கும் நீங்களும் (தொண்டா்கள்), இந்த இயக்கத்தை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும். ஜெயலலிதா கூறியதைப்போல, இந்த இயக்கம் 100 ஆண்டுகளைக் கடந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்றால், பல்வேறு வகைகளில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக ஆட்சிக்கு அனைவரும் முடிவுரை எழுத சபதமேற்போம். அதிமுகவுக்கு வாக்களிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனா். அதிமுகவினா் இரவு, பகல் பாராமல் தோ்தல் பணியாற்றி, மகத்தான வெற்றியை எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் பெற்று, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சமா்ப்பிக்க உறுதியேற்போம். அதேபோல், 2026-இல் அதிமுகவினுடைய ஆண்டு என்பதை உறுதிப்படுத்துவோம் என்று அவா் கூறியுள்ளாா்.