/

மேற்கு தொடா்ச்சி மலையோர பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடா்ச்சி மலையோர பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

Updated On :24 பிப்ரவரி 2024, 8:43 pm

தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.25) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.25) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடா்ந்து திங்கள் முதல் புதன்கிழமை (பிப்.26-28) வரை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது., வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலையே நிலவக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் வரை காணப்படும். மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோரப்பகுதியில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை (பிப்.27,28) சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதிகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.