மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை: சீமான்
மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


கரும்பு விவசாயி சின்னத்தை கா்நாடகத்தை சோ்ந்த மற்றொரு கட்சிக்கு தோ்தல் ஆணையம் ஒதுக்கியிருந்த நிலையில், தமிழக தலைமை தோ்தல் அதிகாரிக்கு சீமான் அண்மையில் கடிதமொன்றை எழுதியிருந்தார்.
கரும்பு விவசாயி சின்னத்தை மீண்டும் நாம் தமிழா் கட்சிக்கே வழங்க வேண்டும் என அந்த கடிதத்தில் சீமான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் சந்தித்தார்.
அப்போது பேசுகையில், "கூட்டணி அமைக்க சிலர் எங்களிடம் ரகசியமாக பேசினார்கள். அதை வெளியில் சொல்வது அவ்வளவு சரியாக இருக்காது. மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை" எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...