'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு இன்று (பிப். 27) பிற்பகல் வருகை புரிந்தார்.
திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமான படை தளத்திற்கு இன்று பிற்பகல் வந்துசேர்ந்தார்.
சூலூரிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு பல்லடம் செல்லவுள்ளார். அங்கிருந்து மாதப்பூரில் நடக்கும் 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்ட மேடைக்கு காரில் செல்கிறார்.
அங்கு பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் வாகனத்தில் ஊர்வலமாக, பொதுமக்களை சந்தித்தவாறு பொதுக்கூட்ட மேடைக்குச் செல்லவுள்ளனர். பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.
அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லவுள்ளார். அங்கு உள்ள தனியார் விடுதியில் இரவு தங்கியிருந்து நாளை (பிப். 28) தூத்துக்குடி சென்று நலத்திட்ட உதவிகளைத் தொடக்கிவைக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!
மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


