ராக்கெட்டில் சீன கொடி: சர்ச்சைக்குள்ளான திமுக விளம்பரம்

சீன கொடியுடன் ராக்கெட் இடம்பெற்றிருப்பதால் சர்ச்சைக்குள்ளானது திமுகவின் விளம்பரம்.
ராக்கெட்டில் சீன கொடி: சர்ச்சைக்குள்ளான திமுக விளம்பரம்

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டு விழா விளம்பரத்தில் சீன கொடி இடம்பெற்றிருப்பது குறித்து திமுக மீது பாஜக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

நாட்டின் மிக முக்கிய துறைகளில் ஒன்றான இஸ்ரோ குறித்து திமுக அரசு வெளியிட்டிருக்கும் விளம்பரம் ஒன்றில், தேசிய கொடிக்கு பதிலாக சீன நாட்டின் கொடியுடன் ராக்கெட் பறப்பது போல இன்று வெளியான நாளிதழ்களில் விளம்பரம் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரோவில் நேற்று ககன்யான் திட்டத்தில் பயணிக்கும் வீரர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில்தான், இஸ்ரோ தொடர்பான விளம்பரத்தில் சீன கொடி இடம்பெற்றிருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, இன்று தூத்துக்குடி மற்றும் நெல்லையில் நடைபெற்ற அரசு விழாக்களில் பங்கேற்று பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் ரூ.17,300 கோடியில் தொடங்கப்பட்ட திட்டப் பணிகளில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டியிருப்பதும் ஒன்றாகும். இது தொடர்பான விளம்பரம் தமிழக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சார்பில் நாளிதழ்களில் வெளியாகியிருக்கிறது.

அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்துடன், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் படங்களுக்கு பின்னணியில், ராக்கெட் ஏவுவது போலவும், அதில், சீன கொடி இருப்பதும்தான் இந்த சர்ச்சைகளுக்கு மூலக்காரணம்.

இதனை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அந்தப் பதிவில், திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்த இந்த விளம்பரம், சீனா மீதான திமுகவின் அர்ப்பணிப்பையும், நமது நாட்டின் இறையாண்மையை அவர்கள் முற்றிலும் புறக்கணிப்பதையும் வெளிப்படுத்துகிறது என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com