திமுக - இந்திய கம்யூ. இடையே உடன்பாடு: 2 தொகுதிகள்?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்க திராவிட முன்னேற்ற கழகம் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மக்களவைத் தேர்தலையொட்டி திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு குறித்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பணிகளை திமுக தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
ககன்யான் விண்வெளி வீரரை திருமணம் செய்த நடிகை!

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் எம்பி சுப்பராயன் தலைமையிலான குழுவுடன் திமுக பேச்சுவார்த்தை குழு இன்று மூன்றாம் கட்ட ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுப்பராயன்,

“ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற திருப்பூர் மற்றும் நாகை தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளோம். எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் இறுதி அறிவிப்பு வெளியாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com