தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பொங்கல் தொகுப்பில் ரூ.1,500, முழு கரும்புஜி.கே.வாசன் வலியுறுத்தல்

குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக ரூ.1,500-மும், முழு கரும்பும் வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

News image

ஜி.கே.வாசன்

Updated On :1 ஜனவரி 2024, 8:29 pm

DIN

சென்னை: குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக ரூ.1,500-மும், முழு கரும்பும் வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு வழங்கவுள்ள பொங்கல் தொகுப்பில் குறைந்தபட்சம் ரூ.1,500, முழு கரும்பு அவசியம் இடம் பெற வேண்டும்.

குறிப்பாக, இயற்கை சீற்றத்தால் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட மற்ற மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழை, பெரு வெள்ளம் போன்றவற்றால் விவசாயிகள், பொது மக்கள் பாதிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பை சற்று கூடுதலாக அளிக்க வேண்டும். கரும்பை கட்டாயமாக விவசாயிகளிடமிருந்து நேரிடையாக கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஜி.கே.வாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.