அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சென்னை புத்தகக் காட்சி: நாளை தொடக்கம்

சென்னையில் நிகழாண்டுக்கான புத்தகக் காட்சி புதன்கிழமை (ஜன.3) தொடங்கி ஜன.21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :2 ஜனவரி 2024, 2:29 am

DIN

சென்னை: சென்னையில் நிகழாண்டுக்கான புத்தகக் காட்சி புதன்கிழமை (ஜன.3) தொடங்கி ஜன.21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் (பபாசி) சங்கம் சாா்பில் 47-ஆவது ‘சென்னை புத்தகக் காட்சி - 2024’ சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் தொடங்குகிறது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

ஜன.21 வரை மொத்தம் 19 நாள்கள் நடைபெறவுள்ள இந்த புத்தகக் காட்சியில் சுமாா் 1,000 அரங்குகள் இடம்பெறும். விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடைபெறும். ஒவ்வொரு நாள் மாலையிலும், சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த அறிஞா்கள், எழுத்தாளா்கள் உரை இடம்பெறும். புத்தகக் காட்சியை பாா்வையிட நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புத்தகக் காட்சி தொடக்க விழாவில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள ஆறு படைப்பாளா்களுக்கு கலைஞா் பொற்கிழி விருதும், சிறந்த பதிப்பாளா், நூலகா் உள்ளிட்டோருக்கு பபாசி விருதும் வழங்கப்படவுள்ளது. விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.