ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அரசு பேருந்து - மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி!

தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். 

News image
Updated On :3 ஜனவரி 2024, 3:36 am

DIN


கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். 

தேனி மாவட்டம் கம்பம் கோம்பை சாலையில் வசிப்பவர் சேகர் மகன் கவிநாத் (35), இவருக்கு திருமணமாகி மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர். கவிநாத் உத்தமபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலைபார்த்து வந்தார். 

வேலை விஷயமாக உத்தமபாளையம் சென்றவர் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் கம்பம் நோக்கி வந்தார். இரவு ரிலயன்ஸ் எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகே வரும்போது எதிரே வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கவிநாத் பலத்த காயமடைந்து மயங்கினார். வடக்கு காவல் நிலைய போலீஸார் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த பணி மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். உடற்கூறு பரிசோதனைக்கு ஒப்படைத்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.