மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், கலப்பின மாடுகள் பங்கேற்க அனுமதியில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஜல்லிக்கட்டு காளைகள் அடையாளப்படுத்தும் விதமாக கால்நடைத்துறை தகுதிச்சான்று வழங்க விண்ணப்பம் என்றும், மாடு திமில் தெரியும் வகையிலும், மாட்டின் உரிமையாளர் உடன் புகைப்படத்துடன் விண்ணப்பத்தினைப் பதிவு செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சியும் இணைந்து நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை முன்னதாக உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருப்பு திரைப்படத்திற்காக சூர்யா எடுத்த பெரிய ரிஸ்க்!
த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி நீதிமன்ற உத்தரவு! மு.க. ஸ்டாலின் அறிக்கை!

நடுவானில் குலுங்கிய தில்லி விமானம்! பயணிகள் காயம்!

பேட்டிங் பயிற்சியாளரை நியமித்த பாகிஸ்தான்..! யார் இந்த மைக்கேல் ஸ்மித்?
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



