

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சேலம் மாவட்டத்தில் என் மண் என் மக்கள் நடைபயணத்தை புதன்கிழமை தொடங்கினார். முன்னதாக சேலம் மக்களவைத் தொகுதி பாஜக அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் ஆத்தூரில் உள்ள விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரத்தில் சாதிப்பெயரை குறிப்பிட்டு இருப்பது வருங்காலத்தில் திருத்திக் கொள்ளப்படும்.
இதையும் படிக்க: காவல் துறை ரூ.10,000 அபராதம்: பூக்களை கொட்டி வியாபாரி போராட்டம்
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ஆன்லைனில் பயனாளிகளுக்கு அனுப்ப வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப் பணம் ரூ.5 ஆயிரம் வழங்க அரசிடம் பொதுமக்கள் கோரிக்கை வைக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பில் நாடகமாடி மக்களுக்கு ரொக்கப் பணம் வழங்குவார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.