தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னைக்கு கனமழை: தமிழகத்தில் ஜன.10 வரை மழை தொடரும்!

தமிழகம், புதுவையில் வருகின்ற ஜனவரி 10-ஆம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2024, 7:39 am

DIN

சென்னை: தமிழகம், புதுவையில் வருகின்ற ஜனவரி 10-ஆம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடித்து வரும் நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜன. 4, 5: தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜன. 6: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜன. 7: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜன. 8: திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், ஜனவரி 10ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், சென்னையில் அதிகாலை வேளையில் லேசான பனிக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.