
மண்ணச்சநல்லூர்: பிரசித்தி பெற்ற மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மண்ணச்சநல்லூரில் வணிக வைசிய சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பகவதி அம்மனுக்கு திருவிழா நடைபெறும். அதன்படி இந்தாண்டு பகவதி அம்மன் திருவிழாவானது டிச.28 ஆம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து, முதல் நாள் பகவதி அம்மன், இரண்டாம் நாள் வெங்கடாஜலபதியுடன் பத்மாவதி, மூன்றாம் நாள் ஆதிபராசக்தி, நான்காம் நாள் ராஜராஜேஸ்வரி, ஐந்தாம் நாள் வெண்ணனத் தாழி கிருஷ்ணர், ஆறாம் நாள் காமாட்சி அம்மன், ஏழாம் நாள் வளைகாப்பு அம்மன் அலங்காரம் நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழவான இன்று ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 நோட்டுகளால் தோரணம் அமைத்து, பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து அலங்கார மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது. தனலட்சுமி அலங்காரம் பூஜையில் கலந்து கொள்வதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.