கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான மணி என்பவரது உணவகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் பிற்பகல் 12 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது ஆதரவாளர் வீடுகளில் கடந்த ஆண்டு மே மாதம் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து ஜூலை மாதம் மற்றும் டிசம்பர் மாதங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நான்காவது முறையாக புதன்கிழமை நண்பகல் 12 மணி அளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான மணி என்பவருக்கு சொந்தமான கரூர் கோவை சாலையில் உள்ள உணவகத்தில் கோவையிலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஏழு பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: ராமர் கோயில் திறப்புவிழா அழைப்பை மறுத்த காங்கிரஸ்!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கு விசாரணை வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திடீரென அவரது ஆதரவாளர் உணவகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!
மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையைத் தகா்த்த தவெக!

5.5.1976: கமிஷன் விசாரணை பற்றி நீதிபதி சர்க்காரியா அறிவிப்பு

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


