பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக நிறைவு!சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21)

தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக பி.எஸ்.ராமன் பரிந்துரை

தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம் ராஜிநாமா செய்த நிலையில், அந்த பதவிக்கு மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமனை, ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது தமிழக அரசு. 

Published On :7 பிப்ரவரி 2024, 8:51 pm IST


சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம் ராஜிநாமா செய்த நிலையில், அந்த பதவிக்கு மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமனை, ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது தமிழக அரசு. 

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்குரைஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். 

அரசின் பல்வேறு முக்கிய வழக்குகளில் அரசு சார்பில் ஆஜரான அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தொடர்ந்து பணியில் நீடித்து வந்த சண்முகசுந்தரம், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளவர், ராஜிநாமா கடிதத்தை அரசிடம் சமர்ப்பித்தார்.

இதையடுத்து புதிய தலைமை வழக்குரைஞரை அரசு விரைவில் நியமிக்கும் என தகவல் வெளியானது. 

இந்த நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம் ராஜிநாமா செய்த நிலையில், அந்த பதவிக்கு மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமனை, ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது தமிழக அரசு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.