பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம் ராஜிநாமா!

தமிழக அரசு சார்பில் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம் தனது பதவி ராஜிநாமா செய்தார்.

News image

வழக்குரைஞர் சண்முகசுந்தரம்

Updated On :10 ஜனவரி 2024, 8:31 am

DIN


தமிழக அரசு சார்பில் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம் தனது பதவி ராஜிநாமா செய்தார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்குரைஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். 

அரசின் பல்வேறு முக்கிய வழக்குகளில் அரசு சார்பில் ஆஜரான அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தொடர்ந்து பணியில் நீடித்து வந்த சண்முகசுந்தரம், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளவர், ராஜிநாமா கடிதத்தை அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.

இதையடுத்து புதிய தலைமை வழக்குரைஞரை அரசு விரைவில் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

2002 இல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 

2021 இல் தமிழக அரசு தலைமை வழக்குரைஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.