மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிப். 16-ல் அனைத்து ரயில்வே தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தம்!

அனைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து பிப்ரவரி 16 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜனவரி 2024, 10:37 am

திருச்சி: அனைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து பிப்ரவரி 16 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தனியார் மயமாக்கலை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் கடந்த மூன்று நாள்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நான்காவது நாளான இன்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தெற்கு ரயில்வேயின்  எஸ்.ஆர்.எம்.யூ. தென் மண்டல தொழிற்சங்க தலைவர் சி.ஏ. ராஜா ஸ்ரீதர் தலைமை வகித்தார் . தொடர்ந்து அவர் பேசியதாவது:

மத்திய அரசுக்கு இந்த உண்ணாவிரதப் போராட்டம் என்பது ஒரு முன்னோட்டமாக நடத்தப்படுகிறது எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும். குறைந்த ஓய்வூதியத்தை அதிகப்படுத்தி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். 

நாடு முழுவதும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 30 லட்சம் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற பிப்ரவரி 16 ஆம் தேதி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ.  துணை பொதுச் செயலாளர் எஸ். வீரசேகரன் மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.