பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:
கோவையிலிருந்து தாம்பரத்துக்கு ஜன.16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண் 06086) இயக்கப்படவுள்ளது. கோவையிலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறுவழித்தடத்தில் தாம்பரத்தில் இருந்து கோவைக்கு ஜன.17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. தாம்பரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06085) மாலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும்.
இதையும் படிக்க: அயோத்தி விழாவில் பங்கேற்பது குறித்து இபிஎஸ் பதில்!
இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து புறப்பட்டு எழும்பூர், பெரம்பூர், அரக்கோனம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவையைச் சென்றடையும்.