சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஊருக்குப் போறாங்க... கூடுவாஞ்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னையிலிருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டதால் கூடுவாஞ்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2024, 12:51 pm IST


சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னையிலிருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டதால் கூடுவாஞ்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளில் புத்தரிசியில் பொங்கலிட்டு வீட்டில் படையலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது வழக்கம். அனைத்துவிதமான காய்கனிகளையும் ஒன்றாக சோ்த்து பொங்கல் கூட்டு தயாரித்து, பச்சரிசி சாதத்துடன் சோ்த்து சாப்பிட்டு மகிழும் பழக்கம் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் நாளை போகி மற்றும் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வேலை நிமித்தமாக சொந்த ஊர்களிலிருந்து சென்னை வந்திருக்கும் லட்சக்கணக்கானோர் நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

Story image

இதனால் வெள்ளிக்கிழமை முதலே, முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏராளமான வெளியூர் பேருந்துகளும், கார்களில் சொந்த ஊர் செல்பவர்களும் இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டதால், கூடுவாஞ்சேரி அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்துக் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று, பெரும்பாலும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தே காணப்படும் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.