ராகுல் யாத்திரையில் பங்கேற்க திருமாவளவனுக்கு அழைப்பு!

ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளா
ராகுல் யாத்திரையில் பங்கேற்க திருமாவளவனுக்கு அழைப்பு!

ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில், யாத்திரையில் உங்களது பங்கேற்பும், ஆதரவும் ராகுலுக்கு எழுச்சி மற்றும் உந்துதலை ஏற்படுத்தும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராகுலின் முதல் கட்ட பாதயாத்திரையை கன்னியாகுமரியில் ஜனவரி 14-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். காஷ்மீரில் நடந்த நிறைவு நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

இதேபோல் தமிழகத்தில் உள்ள திமுக அதன் கூட்டணி காட்சிகளில் இருக்கும் முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com