47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வன்னியன் விடுதியில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன் விடுதியில்  நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டில் வீரர்கள் தீரத்துடன் காளைகள் அடக்கி வருகின்றனர்.

News image
Updated On :17 ஜனவரி 2024, 6:56 am

DIN

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன் விடுதியில்  நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டில் வீரர்கள் தீரத்துடன் காளைகள் அடக்கி வருகின்றனர்.

ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன் விடுதியில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.போட்டியைச்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதையடுத்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 800 காளைகள் அவிழ்த்து விடப்பட உள்ளன.

Story image

300 வீரர்கள் கலந்து கொண்டு வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளைத் தீரத்துடன் அடக்கி வருகின்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளருக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக்கிள், பிரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன. 

Story image

சிறந்த காளை, சிறந்த மாடுபிடி வீரருக்கும்  இருசக்கர வாகனங்கள் பரிசளிக்கப்பட உள்ளன. காயமடைந்த வீரர்களுக்கு அங்குத் தயார் நிலையில் உள்ள மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.300க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.