ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

இந்திய அளவில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளப் பிரதமர் நரேந்திர மோடி ஜன.19-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். 

News image
Updated On :17 ஜனவரி 2024, 11:23 am

DIN

இந்திய அளவில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளப் பிரதமர் நரேந்திர மோடி ஜன.19-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். 

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, கேலோ இந்தியா போட்டிகளைத் தொடங்கி வைக்க உள்ளார். 

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ராமேஸ்வரம் செல்லும் அவர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜன.31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளானது சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ளன. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் திருச்சி மாநகர போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.