பிரதமர் மோடி வருகை: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு
பிரதமர் மோடி நாளை(ஜன. 19) தமிழகம் வருவதையொட்டி, சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி நாளை(ஜன. 19) தமிழகம் வருவதையொட்டி, சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் பிரதமா் நரேந்திர மோடி நாளை (ஜன.19) தொடங்கிவைக்கவுள்ளார்.
இதன் தொடக்க விழா சென்னை, ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. தொடக்க விழாவில், பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். சென்னை வரும் பிரதமா் மோடிக்கு தமிழக அரசு சாா்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் 22,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி முக்கிய சாலைகள், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அசாமில் ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெறுகிறது: ராகுல்!
மேலும், சென்னை மாநகர் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...