சென்னை வந்தார் பிரதமர் மோடி

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். 
‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை(ஜன.19) தொடங்கிவைக்கவுள்ளார். இதன் தொடக்க விழா சென்னை, ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. 
தொடக்க விழாவில், பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். இந்த நிலையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். 
பெங்களூரு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தனி விமானத்தில் பிரதமர் சென்னைக்கு வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆளுநர் மாளிகை, விமான நிலையம், அடையாறு கடற்கடை தளம் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com