டிடி தமிழ் ஒளிபரப்பை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

புது பொலிவுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள டிடி தமிழ் ஒளிபரப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
டிடி தமிழ் ஒளிபரப்பை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

புது பொலிவுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள டிடி தமிழ் ஒளிபரப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.  

தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை தொடக்கி வைத்தார். சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அப்போது விழாவில் பிரதமர் மோடிக்கு வீரமங்கை சிலையை நினைவுப் பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 

தொடர்ந்து ஆளுநர், மத்திய அமைச்சர்களுக்கு நினைவுப் பரிசை அமைச்சர் உதயநிதி வழங்கினார். இன்று கோலாகலமாகத் தொடங்கியிருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வரும் 31-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கின்றன.

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, புது பொலிவுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள டிடி தமிழ் ஒளிபரப்பையும் தொடக்கி வைத்தார். தூர்தர்ஷனின் தமிழ் ஒளிப்பரப்பான டிடி பொதிகை, இனி டிடி தமிழ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com