சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமான பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன் என்ற அமைப்பை அனுமதி பெறாமல் தொடங்கி அரசு நிதியைப் பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தைச் செயல்படச் செய்ததாக பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்தினர் புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து துணைவேந்தர் ஜெகன்நாதன் கைதான நிலையில், சேலம் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனிடையே உயர் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான வழக்கைந ரத்து செய்யக் கோரி ஜெகன்நாதன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கை விசாரிக்கத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவணங்களைச் சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை என தனது உத்தரவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். தடையை நீக்க வேண்டும் என்றால் தனி மனுத் தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
படிக்க: 12 ராசிக்கான வாரப் பலன்கள்
தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக் கோரிய ஜெகநாதன் மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து அவர் உத்தரவிட்டார். தடையை நீக்க வேண்டும் என்றால் தனி மனுத் தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


