12 ராசிக்கான வாரப் பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜன.19 - ஜன.25) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
12 ராசிக்கான வாரப் பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜன.19 - ஜன.25) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வருமானம் உயரும். தொழிலில் மாற்றம் கொண்டு வருவீர்கள். குடும்பத்தில் சச்சரவு இல்லாத சூழ்நிலை அமையும். குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரிகளுக்கு கடன் வசூலாகும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் தங்களது பணிகளில் கவனமாக இருப்பீர்கள்.

பெண்கள் சேமிப்பில் கவனம் செ லுத்துவீர்கள். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

பல விருப்பங்கள் ஒரேநேரத்தில் 
நிறைவேறும். சொத்துகள் கைவந்து சேரும்.  உடன் பிறந்தோர் வழியில் ஆதாயம் உண்டு. கடன் வாங்க நேரிடாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் குறித்த நேரத்தில் நிறைவேறும். வியாபாரிகள் விட்டுக் கொடுத்து நடக்கவும். விவசாயிகள் புதிய மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்து உயரும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். பெண்கள் இல்லத்தில் அமைதியைக் காண்பீர்கள்.

மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழிலைத் திறம்பட நடத்துவீர்கள். பயணங்களால் நன்மை கிடைக்கும். திறமையும் தன்னம்பிக்கையும் வெளிப்படும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடப்பீர்கள். வியாபாரிகள் சிறிய முதலீட்டில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் எண்ணங்கள் நிறைவேறும். கலைத் துறையினர் உழைப்புக்குத் தகுந்த பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்கள் அன்பாகப் பேசி உறவினர்களை வசப்படுத்துவீர்கள். 

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொருளாதாரம் உயர்வாக இருக்கும். எடுத்த காரியங்கள் நிறைவேறும். பங்கு வர்த்தகம் கைகொடுக்கும். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் ஆதரவைத் தக்க வைப்பீர்கள்.

விவசாயிகள் உபரி வருவாயைப் பெறுவீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு பிறரின் ஆதரவு கூடும்.

பெண்களுக்கு குடும்பத்தினரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மாணவர்கள் பெற்றோர் ஆதரவைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

சில அலைச்சல் ஏற்பட்டாலும் செயல்களை விரைந்து முடிப்பீர்கள். சமூகப் பணிகளில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள்.

புதியவர்களின் நட்பைப் பெறுவீர்கள்.  உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். கலைத் துறையினர் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவீர்கள்.  பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மாôணவர்கள் ஆசிரியர்களை மதித்து நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுப காரிய முயற்சிகள் நிறைவேறும்.  தொழிலை விரிவுபடுத்துவீர்கள். எதிரிகளின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள்.

பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பிறரிடம் சகஜமாகப் பழகுவீர்கள். வியாபாரிகளுக்கு நன்மை உண்டாகும்.

விவசாயிகள் சாதுர்யமாக நடப்பீர்கள். அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் நன்மை அடைவீர்கள். கலைத் துறையினர் பிறரால் ஆதாயம் அடைவீர்கள்.

பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் புதிய திட்டங்களைத் தொடங்குவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜன. 19.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். அரசு சலுகைகள் கிடைக்கும். தாமதமாகிய சுப காரியங்கள் இப்போது நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு உண்டு. 

வியாபாரிகள் புதிய தொழில் முறைகளைக் கையாளுவீர்கள். விவசாயிகள் பயிர் விளைச்சலில் நிறைவைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் காரியங்களைச் சாதிப்பீர்கள்.

கலைத் துறையினரின் வருவாய் உயரும். பெண்கள் உடன்பிறந்தோருடன் ஒற்றுமையாக இருப்பீர்கள்.  மாணவர்கள் படிப்பில் கவனமாக இருந்து வெற்றி அடைவீர்கள்.

சந்திராஷ்டமம் -  ஜன. 20, 21, 22.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

மனதுக்கினிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். நண்பர்களின் உதவியால் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். வேலையில் அலைச்சல் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கெடுபிடிகள் குறையும். வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். விவசாயிகள் கால்நடை பராமரிப்புக்குச் செலவழிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணியில் தீவிரமாக இருப்பீர்கள். கலைத் துறையினருக்கு பிறர் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு கணவரிடம் அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜன. 23, 24.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உங்கள் வசீகரமான  பேச்சால் பிறரைக் கவருவீர்கள்.  சமூகத்தில் மதிப்பு உயரும்.  பிறரிடம் வீண்வாக்குவாதம் வேண்டாம்.  விருப்பங்கள் நிறைவேறும்.

உத்தியோகஸ்தர் களின் தனித்திறமை வெளிப்படும். வியாபாரிகளுக்கு அலைச்சல் குறையும். விவசாயிகள் கடுமையாக உழைப்பீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரிடம் விலகியே இருப்பீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

பெண்கள் உடல் நலம், மன வளத்தைக் காக்க முயற்சிப்பீர்கள். மாணவர்கள் கவனம் சிதறாமல் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜன. 25.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

புதிய சொத்துகளை வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலில் சிறப்பான வளர்ச்சி உண்டு.  எவருக்கும் கடன் உத்தரவாதம் தரக்கூடாது. உத்தியோகஸ்தர்கள் பிறரை நம்ப வேண்டாம். வியாபாரிகள் திட்டமிட்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். 

விவசாயிகள் சமூகச் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்தில் சிறு குறைபாடுகள் உண்டாகும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

உடனிருப்போர் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்ப்புகள் இருக்காது. வருமானம் உயரத் தொடங்கும்.  

ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களின் பணிச்சுமையை சக ஊழியர்கள் பகிர்ந்துகொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் - வாங்கல் நன்றாகவே இருக்கும்.

விவசாயிகளுக்கு பழைய குத்தகைகளில் இருந்து லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிரிகளை கண்காணித்துச் செயல்படுவீர்கள்.

கலைத் துறையினர் ரசிகர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் மிகும். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

முயற்சிகள் வெற்றியடையும்.  முகத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும். பிறரை அரவணைத்துச் செல்வீர்கள். எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் ரகசியங்களைக் காப்பாற்றுவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். 

விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.  அரசியல்வாதிகள் பெயர், புகழை தக்க வைப்பீர்கள். கலைத் துறையினருக்கு ரசிகர்களின் அன்பும், ஆதரவும் தொடரும்.

பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் பிறருடன் இணக்கமாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம்}இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com