திருச்சியில் மோடிக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது

மோடிக்கு எதிராக கருப்புக்கொடி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஈடுபடுவதற்காக வீட்டு காவலில் இருந்து வெளியேறிய அய்யாக்கண்ணு உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவல்துறையினரால் கைது 
திருச்சியில் மோடியை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வீட்டை விட்டு வெளியேறிய அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
திருச்சியில் மோடியை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வீட்டை விட்டு வெளியேறிய அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


திருச்சி: திருச்சியில் சாமி தரிசனம் செய்ய வந்த மோடிக்கு எதிராக கருப்புக்கொடி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஈடுபடுவதற்காக வீட்டு காவலில் இருந்து வெளியேறிய அய்யாக்கண்ணு உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

பிரதமா் திருச்சி வருவதையொட்டி, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு காவல் துறையில் அனுமதி கேட்டாா். போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதைத் தொடா்ந்து, பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்று அவா் அறிவித்தாா்.

இதையடுத்து, அவா் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என போலீஸாா் கூறியதுடன், அவரை திருச்சி அண்ணாமலை நகரில்,வியாழக்கிழமை முதல் வீட்டுக்காவலில் வைத்து போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

இதனைத் தொடர்ந்து பிரதமரின் வருகையின்போது விவசாயிகள் சாா்பில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் மேற்கொள்வோம் என்றாா். 

இந்த நிலையில், விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மோடியை கண்டித்து திருச்சியில் சாமி தரிசனம் செய்ய வந்த மோடிக்கு எதிராக வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வீட்டை விட்டு வெளியேறிய போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com