அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார். 

News image
ராமேஸ்வரம் கோயிலில் வழிபட்டார் பிரதமர் மோடி
Updated On :7 பிப்ரவரி 2024, 3:17 pm

DIN


ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார். 

தமிழகத்துக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வருகை தந்தார். பின்னர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார். 2ஆவது நாள் சுற்றுப்பயணமாக அவர் இன்று காலை திருச்சி அரங்கநாதரை தரிசனம் செய்தார். 

இதையடுத்து, ராமேஸ்வரம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி அக்னி தீர்த்தக் கடலில் நீராடிய பின்னர், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தக் கிணறுகளிலும் நீராடினார்.  

பின்னர், ராமநாத சுவாமியை தரிசனம் செய்தார். சுவாமி தரிசனத்துக்குப் பின் கோயில் பிராகாரத்தை வலம் வந்து வழிபட்டார். கோயில்  நிர்வாகத்தின் சார்பில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.