வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார்!

மலையாள நடிகர் சலீம் குமார் உயிரிழந்தது பற்றி...

News image

மலையாள நடிகர் சலீம் குமார். - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :7 ஜூன் 2026, 8:27 am IST

புகழ்பெற்ற மலையாள நடிகரும் தேசிய விருது பெற்றவருமான சலீம் குமார் (56) நேற்றிரவு (ஜூன் 6) காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கேரளத்தின் பரவூரில் பிறந்த சலீம் குமார், திரையுலகில் நுழைவதற்கு முன் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளராக இருந்தார்.

பின்னர் 1997 ஆம் ஆண்டு வெளியான ’இஷ்டமானு நூறு வட்டம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 1997 ஆம் ஆண்டு திரைப்படத்தில் அறிமுகமானாலும், 2000-களில்தான் அவரது நகைச்சுவை நடிப்பு அவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது.

இதனைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மலையாள சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த நடிகராகத் திகழ்ந்தார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், இயக்குநர், மிமிக்ரி கலைஞர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர்.

மலையாள சினிமாவில் முக்கிய நடிகராக வளம் வந்த சலீம் குமார், 2010 ஆம் ஆண்டு வெளியான ’ஆடமின்டே மகன் அபு’ திரைப்படத்துக்காக தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.

மேலும், தமிழில் வெளியான நெடுஞ்சாலை, மரியான் போன்ற படங்களிலும் சலீம் குமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Renowned Malayalam actor and National Award winner Salim Kumar (56) passed away last night (June 6).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.