2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

மலையாள நடிகர் சலீம் குமார் மருத்துவமனையில் அனுமதி! வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை!

பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

Actor Salim Kumar

மலையாள நடிகர் சலீம் குமார் - Instagram

Published On :

பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் திடீர் உடல்நிலைக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளத்தில், பிரபல மலையாள நடிகர் சலீம் குமாருக்கு இன்று (ஜூன் 6) காலை திடீரென உடல்நிலைக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சலீம் குமாருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலைக் குறித்து பின்னர் தெளிவான விளக்கம் அளிக்கப்படும் எனவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளத்தின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக அறியப்படும் சலீம் குமாருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

கடந்த 2010 ஆம் ஆண்டு தேசிய விருது வென்ற நடிகர் சலீம் குமார் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்து பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Malayalam actor Salim Kumar has been admitted to the hospital due to a sudden health issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.