பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பூசாரிகள், கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்கு புலப்படாத அச்சம்: ஆளுநர் ஆர்.என்.ரவி

பூசாரிகள், கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்கு புலப்படாத அச்ச உணர்வு இருந்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஜனவரி 2024, 5:35 am

DIN

பூசாரிகள், கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்கு புலப்படாத அச்ச உணர்வு இருந்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தியாகராய நகரில் உள்ள கோதண்டராமர் கோயிலில் வழிபாடு நடத்திய ஆளுநர் ரவி எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது, "இன்று காலை  சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்  உள்ளது.
பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப்  புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும்  பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. 
பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது." இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.