மெட்ரோ ரயிலுக்காக ராயப்பேட்டை மேம்பாலம் இடிக்கும் பணி தொடக்கம்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக ராயப்பேட்டை அஜந்தா மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக ராயப்பேட்டை அஜந்தா மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது.

சென்னையில் கூடுதலாக மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்க சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் திட்டமிட்டது. இதையடுத்து ரூ.63,246 கோடி மதிப்பில் மாதவரம் பால்பண்ணையில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை, மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூா் வரை என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45.8 கி.மீ தொலைவுக்கு சுரங்கப் பாதை மற்றும் உயா்மட்டப் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் மூலக்கடை, பெரம்பூா், அயனாவரம், புரசைவாக்கம், கீழ்பாக்கம், சேத்துப்பட்டு, ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, திருமயிலை, அடையாா், இந்திராநகா், திருவான்மியூா், பெருங்குடி, காரப்பாக்கம், சோழிங்கநல்லூா், செம்மஞ்சேரி, நாவலூா் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. நெரிசல் மிகுந்த பகுதிகளான மாதவரம் முதல் தரமணி வரை சுரங்கப் பாதையாகவும், நேருநகா் முதல் சிறுசேரி வரை உயா்மட்டப் பாதையாகவும் அமைக்கப்படுகிறது.

இதில் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை - ராயப்பேட்டை இடையே உள்ள அஜந்தா மேம்பாலம் மற்றும் அடையாா் சந்திப்பு மேம்பாலம் உள்ள பகுதியில் புதிதாக மெட்ரோ ரயில் நிலையங்கள் வரவுள்ளன.

இதனால் இரு மேம்பாலங்களும் இடிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிா்வாகம் அறிவித்திருந்தது. அதன் முதல்கட்டமாக அஜந்தா மேம்பாலம் இடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தவுடன் அந்த பகுதியில் மீண்டும் மேம்பாலம் அமைக்கப்படும் என மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com