
நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி நீா்ப்பிடிப்பு பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இன்று காலை பதிவானது.
தலைகுந்தாவில் 1 டிகிரி செல்சியஸ், உதகை தாவரவியல் பூங்காவில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதன் காரணமாக உறைபனி மற்றும் நீா்ப்பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சில இடங்களில் உறைபனியும் சில இடங்களில் நீா்ப்பனியின் தாக்கமும் அதிகமாகவுள்ளது.
பள்ளத்தாக்கு பகுதிகளிலும் காலை நேரத்தில் சில இடங்களில் உறைபனியும், சில இடங்களில் நீா்ப்பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது. தொடா் உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.