தேவி விருதுகள் 2024 விழா நிறைவு!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் 2024ஆம் ஆண்டுக்கான தேவி விருதுகள் வழங்கும் விழா நிறைவடைந்தது.
தேவி விருதுகள் 2024 விழா நிறைவு!

சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் 2024ஆம் ஆண்டுக்கான தேவி விருதுகள் விழா இன்று நிறைவுபெற்றது.

சென்னை கிண்டியிலுள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தேவி விருதுகள் வழங்கும் விழா இன்று ( ஜன.25) மாலை 6 மணியளவில் தொடங்கியது.

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 11 பெண் சாதனையாளர்களுக்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் இந்த விழாவில் விருது வழங்கினார்.

விருதுபெற்றவர்கள்:

1. கர்நாடக இசையை பிரபலப்படுத்தியதற்காக பாடகி அருணா சாய்ராம்.

2. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பக்கபலமாக இருப்பதற்காக தொழிலதிபர் காவியா மாறன்.

3. இந்தியாவின் முதல் உள்நாட்டு கரோனா தடுப்பூசியை உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்ததற்காக விஞ்ஞானி பிரியா ஆப்ரகாம்.

4. இந்தியாவின் முதன்மையான வானியற்பியல் நிறுவனத்தை நடத்துவதற்காக வானியற்பியலாளர் அன்னபூரணி சுப்ரமணியம்.

5. கவிதை மற்றும் புனைவுக்கதைகளில் ஆற்றிய பணிக்காக எழுத்தாளர் சரண்யா மணிவண்ணன்.

6. குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக எழுத்தாளர் ஷோபா விஸ்வநாத்.

7. சென்னை பாரம்பரியத்துக்கு ஆற்றும் சேவைக்காக கட்டடவியல் துறையை சேர்ந்த திருபுரசுந்தரி செவ்வல்.

8. மாணவர்கள் மத்தியில் வானியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக வானவியலாளர் முனைவர் ஸ்ரீமதி கேசன். 

9. மாற்றத்திற்கான வடிவமைப்பை மேற்கொள்வதற்காக ஆடை வடிவமைப்பாளர் உமா பிரஜாபதி.

10. செட்டிநாட்டு கொட்டான் முதல் கண்டாங்கி சேலை வரை கைவினை மற்றும் பாரம்பரிய கலாசாரப் பணிகளுக்காக விசாலாட்சி ராமசாமி.

11. விவசாய துறையில் ஆற்றும் சேவைக்காக சூழலியல் ஆர்வலர் அர்ச்சனா ஆகியோர் விருது பெற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com