இந்தியா கூட்டணி போல் திமுக கூட்டணியும் சிதறும்: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
இந்தியா கூட்டணி போல் திமுக கூட்டணியும் சிதறும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


இந்தியா கூட்டணி போல் திமுக கூட்டணியும் சிதறும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்திகயாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியா கூட்டணி நெல்லிக்காய் மூட்டை போல் சிதறுகிறது. அதே நிலை தமிழகத்திலும் வரும். திமுகவில் உள்ள கூட்டணிக் கட்சிகள் இடையே பல முரண்பாடுகள் உள்ளன.
பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. பாஜக என்ற பெட்டியை கழற்றிவிட்டோம். இனி அந்த பெட்டியை இணைக்க வாய்ப்பில்லை. தன்னை முன்னிலைபடுத்த வேண்டுமென்பதற்காகவே அண்ணாமலை இப்படி பேசுகிறார்.
அண்ணாமலை போல் அண்ணா, அண்ணா என போலி கும்பிடு போடும் நபர்கள் நாங்கல் இல்லை. அதிமுக சிங்கமாக எதிர்த்து வரும்போது, அனைத்து ஆடுகளும் ஓடும் நிலைதான் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...