‘வெளிநாட்டு பல்கலை.களை ஈர்க்கும் ஆற்றல் கொண்ட தென்மாநிலங்கள்’
வெளிநாட்டு பல்கலைக்கழங்களை ஈர்க்கும் ஆற்றல் தென்மாநிலங்களுக்கு உள்ளதாக கேரள மாநில உயர்கல்வி அமைப்பின் திட்ட அலுவலர் எல்தோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டு பல்கலைக்கழங்களை ஈர்க்கும் ஆற்றல் தென்மாநிலங்களுக்கு உள்ளதாக கேரள மாநில உயர்கல்வி அமைப்பின் திட்ட அலுவலர் எல்தோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை இருநாள்கள் நடைபெற்றது.
கல்விச் சிந்தனை அரங்கில், இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் என்ற தலைப்பில் எல்தோ மேத்யூஸ், அமிர்தா சடரங்கி மற்றும் மைக்கேலா குச்லர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
எல்தோ மேத்யூஸ் பேசியதாவது:
“குறிப்பாக ஆப்ரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை ஈர்க்கும் ஆற்றல் தென்மாநிலங்களுக்கு உள்ளது, ஆனால், மாநிலங்கள் பல்கலைக்கழங்களை ஈர்க்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.” என்று தெரிவித்தார்.
ஈடன்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அமிர்தா சடரங்கி பேசியதாவது:
“புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மட்டுமல்லாமல், வெளிநாட்டு பல்கலைக்கழகள் கொண்டு வரும் புதிய திட்டங்களும் இந்தியாவின் கதவை திறக்கிறது.” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...