கல்வியில் சாதி அடிப்படையிலான விவாதம்: எழுத்தாளர் நந்திதா கிருஷ்ணன்

கல்வியில் சாதி அடிப்படையிலான விவாதத்தை நம்மால் நிறுத்த முடியவில்லை என்று எழுத்தாளர் நந்திதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கல்வியில் சாதி அடிப்படையிலான விவாதத்தை நம்மால் நிறுத்த முடியவில்லை என்று எழுத்தாளர் நந்திதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை  இருநாள்கள் நடைபெற்றது.

கல்விச் சிந்தனை அரங்கில், கல்விக்கான அடிப்படைகள் என்ற தலைப்பில் ஜவஹர் சிர்கர் மர்றும் நந்திதா கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். 

எழுத்தாளர் நந்திதா கிருஷ்ணா பேசியது:

கல்வியில் சாதிய அடிப்படையிலான விவாதத்தை நம்மால் நிறுத்த முடியவில்லை. இந்த கல்வி நிறுவனங்கள் கிழக்கிந்திய கம்பெனிகளின் தேவைகளுக்காக முதலில் நிறுவப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது, நிர்வாக ரீதியான பணியாளர்களுக்காக கல்லூரிகளை நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன் முதன்மை நோக்கம் கல்வி அல்ல.

கல்வியின் நோக்கம் படைப்பாற்றலை வளர்ப்பது மற்றும் மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதை கேள்வி கேட்பதாக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய கல்வி முறை மாறியுள்ளது. 

சாதி அடிப்படையிலான சுமை குறிப்பிடத்தக்க சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போதே சாதியை தெரிவிக்கும் சூழல் உள்ளது.

சாவர்க்கர், விவேகானந்தர், சுப்ரமணிய பாரதி போன்றவர்களின் படைப்புகளை ஆராய்ச்சி செய்யும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்பியும், மத்திய கலாச்சார துறையின் முன்னாள் செயலருமான ஜவஹர் பேசியது:

“கல்லூரி என்பது உறவுகளைத் தொடங்குவதற்கும், சமூக தொடர்புகள் ஏற்படுவதற்கும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு தளமாக செயல்படுகிறது. இருப்பினும், சில சுமைகள் இருப்பதை ஒப்புக்கொள்வது அவசியம்.” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com