இந்தியா என்ற சொல்லுக்கு எதிரானவர்கள் அல்ல: எழுத்தாளர் ராம் மகாதேவ்

இந்தியா என்ற சொல்லுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று எழுத்தாளர் ராம் மகாதேவ் தெரிவித்தார்.
இந்தியா என்ற சொல்லுக்கு எதிரானவர்கள் அல்ல: எழுத்தாளர் ராம் மகாதேவ்

இந்தியா என்ற சொல்லுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று எழுத்தாளர் ராம் மகாதேவ் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை  இருநாள்கள் நடைபெற்றது.

கல்விச் சிந்தனை அரங்கில், பாரதம் மற்றும் ஹிந்துத்துவா என்ற தலைப்பில் எழுத்தாளர் ராம் மகாதேவ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:

“பாரதம் என்ற பெயரை உலகின் 80 சதவிகித பொருளாதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் கூடியிருந்த ஜி20 மாநாட்டில் முன்னிலை படுத்தினோம். 

நாங்கள் இந்தியா என்ற சொல்லுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், பாரத் என பயன்படுத்த நாங்கள் அஞ்சமாட்டோம். பாரதப் பாரம்பரியத்தில் அனைவருக்கும் சமமான மரியாதை அளிக்கப்பட வேண்டும் 

ராமர் கோயில் கட்ட ஆரம்பகால முன்னெடுப்புகளை எடுத்ததாக காங். பெருமைப்பட விரும்பினால், பாபர் மசூதி இடிப்புக்கும் பொறுப்பேற்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com