சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

‘பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்’

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்று ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீமதி கேசன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:28 am

DIN

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்று ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீமதி கேசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை இருநாள்கள் நடைபெற்றது.

கல்விச் சிந்தனை அரங்கில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் கல்வியில் பெண்கள் என்ற தலைப்பில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஸ்ரீமதி கேசன் கலந்து கொண்டு பேசினார். 

ஸ்ரீமதி கேசன் பேசியது:

“பெண்களுக்கு விரைவில் திருமணம் முடிக்க வேண்டும் என்ற சிந்தனை இருந்தது. ஆனால், தற்போது அதிக பெண்கள் விஞ்ஞானிகளாகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். ஆராய்ச்சிகளில் ஈடுபட பெண்களை ஊக்குவிக்க வேண்டும். 

அக்னி பணியில் தலைமை தாங்கியதற்காக ‘அக்னி புத்ரி’ என்று போற்றப்படும் டெஸ்ஸி தாமஸ், பலருக்கு அறிமுகம் இல்லாதவராகவே இருக்கிறார்.  “இளம் விஞ்ஞானி இந்தியா” போட்டியில் இளம் பெண்கள் சாதனை படைத்தாலும், சில பெற்றோர்கள் தங்கள் மகள்களை அறிவியல் படிப்பை தொடர்வதை தயங்குகிறார்கள். இந்த தயக்கம் சில சமூகங்களில் கலாச்சார விதிமுறைகளிலிருந்து உருவாகிறது. பெண்கள் பாரம்பரியமாக 12-ஆம் வகுப்பு முடித்தவுடன் விரைவில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.