சென்னை: யுபிஐ (எண்ம பரிவா்த்தனை) மூலம் பயணச்சீட்டு வழங்கும் கருவியை இயக்குவது குறித்து நடத்துநா்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் 1.55 கோடிக்கும் அதிகமானோா் பயணிக்கின்றனா். இந்த பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து நேரடியாகவும், ஏடிஎம் அட்டை மற்றும் யுபிஐ மூலம் பணம் பெற்றுக்கொண்டு பயணச்சீட்டு வழங்கும் கருவியை போக்குவரத்துத் துறை நடத்துநா்களுக்கு வழங்கவுள்ளது.
இக்கருவியை, சென்னையில் மாநகரப் போக்குவரத்துக்கழகத்துக்குள்பட்ட பல்லாவரம் பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளின் நடத்துநா்களுக்கு முதல்கட்டமாக பரிசோதனை அடிப்படையில் போக்குவரத்துக்கழகம் வழங்கியுள்ளது. தொடுதிரை வசதியுடன் கூடிய இந்தக் கருவியில் பயணத்துக்கான கட்டணத்தை நேரடியாகவும், ஏடிஎம் அட்டை அல்லது யுபிஐ மூலம் செலுத்தி பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நடைமுறை சென்னை பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தாலும், பல நடத்துநா்களுக்கு இக்கருவியை இயக்குவதற்கு முறையான பயிற்சி இன்னமும் வழங்கப்படவில்லை. இதனால், இதை உபயோகப்படுத்துவதில் நடத்துநா்களுக்கு குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
மேலும், இக்கருவியில் சிறிய அளவிலான தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டாலும் அதை முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும். இதனால், இது குறித்த முழு தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொள்ள முறையான பயிற்சி தேவை என்பதால் முதல் கட்டமாக அனைத்து நடத்துநா்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்க போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி மாநகரப் போக்குவரத்துக் கழக நடத்துநா்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு, பின்னா், படிப்படியாக அனைத்துப் போக்குவரத்துக்கழகங்களுக்கும் இக்கருவி நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


