கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

அசத்தல் வெற்றியுடன் காலிறுதியில் அஷ்மிதா, ரக்ஷிதா

தென் கொரியாவில் நடைபெறும் கொரியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, ரக்ஷிதா ஸ்ரீ ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

கோப்புப்படம்

Published On :

தென் கொரியாவில் நடைபெறும் கொரியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, ரக்ஷிதா ஸ்ரீ ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அஷ்மிதா சாலிஹா 20-22, 21-15, 21-19 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஜப்பானின் ஹினா அகெசியை வீழ்த்தினார்.

ரக்ஷிதா ஸ்ரீ 18-21, 21-19, 21-18 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் தன்வி சர்மாவை தோற்கடித்து அசத்தினார்.

இதையடுத்து காலிறுதியில் அஷ்மிதா - ரக்ஷிதா மோதுகின்றனர். போட்டியில் தற்போது களத்திலிருக்கும் இந்தியர்கள், இவர்கள் இருவர் மட்டுமே.

ஆடவர் இரட்டையரில், கிருஷ்ணபிரசாத் கராகா/பிருத்வி கிருஷ்ணமூர்த்தி ராய் இணை 7-21, 8-21 என்ற வகையில், மலேசியாவின் மான் வெய் சோங்/சோ வூய் யிக் கூட்டணியிடம் தோல்வியுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.