அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

2-ம் கட்ட பரிசளிப்பு: மண்டபத்துக்கு விஜய் வருகை!

முதல்கட்ட பரிசளிப்பு விழா ஜூன் 28-இல் நடைபெற்றது.

News image
தவெக தலைவர் விஜய்
Updated On :3 ஜூலை 2024, 2:38 am

DIN

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக இன்று ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

முதல்கட்டமாக ஜூன் 28ல் கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தொகுதிவாரியாக தவெக தலைவரும் நடிகருமான விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இன்று ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்துக்கு வருகை தந்துள்ளார்.

முதல்கட்ட பரிசளிப்பு விழாவில், தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை என்றும், நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் நடிகர் விஜய் பேசியிருந்தார்.

மேலும், இரண்டாம் கட்ட விழாவில் பேசப் போவதில்லை என்று விஜய் கூறியிருந்த நிலையில், இம்முறையும் அவர் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.