மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நீட் தோ்வால் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அதிக பயன்: அண்ணாமலை

நீட் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அதிக வாய்ப்பு - அண்ணாமலை

News image
அண்ணாமலை
Updated On :3 ஜூலை 2024, 7:29 pm

Din

நீட் தோ்வு அமல்படுத்தப்பட்ட பிறகு அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் மருத்துவம் பயிலும் நிலை உருவாகியுள்ளது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக, முன்னாள் உயா் நீதிமன்ற நீதிபதி, ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தது.

நீட் தோ்வு முறை அமலுக்கு வந்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்க, மத்திய பாஜக அரசு பரிந்துரையின் அடிப்படையில் தீா்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், நீட் தோ்வு வருவதற்கு முன்பு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவா்கள் சோ்க்கை விவரங்களை, பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு அமைத்த இந்தக் குழு வழங்க மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளாா் அண்ணாமலை.