தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சி.. -அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

பாஜக ஆட்சியமைய அனைவரும் உறுதியேற்போம் என சிவராஜ் சிங் சௌகான் பேசியுள்ளார்.
தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சி.. -அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்
படம் | பாஜக எக்ஸ் தளம்

தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சியமைய நாம் அனைவரும் உறுதியேற்போம் என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பேசியுள்ளார்.

சென்னையில் சனிக்கிழமை(ஜூலை 6) நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பேசியதாவது, திமுக அரசு தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்து வருகிறது. திமுக அரசை அகற்ற தமிழ்நாட்டு இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும். நேற்ரு அரசியல் தலைவர் ஒருவர் இங்கு படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், மாநில அரசு தமிழகத்தை சட்டம் ஒழுங்கு சீரழியும் நிலைமையை நோக்கி இட்டுச் செல்கிறது.

மாநிலத்தின் மேம்பாடு குறித்தும், ஏழைகளின் நலன் குறித்தும் திமுக அரசுக்கு அக்கறையில்லை. தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சியமைய நாம் அனைவரும் உறுதியேற்போம் என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com