ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி மனு: இன்று விசாரணை
மாநகராட்சி ஆணையா் எந்த பதிலும் அளிக்காததால் நீதிமன்றத்தில் மனு.


பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) விசாரணைக்கு வருகிறது.
இதுதொடா்பான கோரிக்கை மனு ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும் வழக்குரைஞருமான பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் அளிக்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையா் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த கோரிக்கை தொடா்பாக அவசரமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொற்கொடி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி(பொ) அரங்க.மகாதேவனிடம் முறையிடப்பட்டது.
இந்த மனுவை தனி நீதிபதி ஒருவா் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கை ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு காணொலி மூலம் நீதிபதி வி.பவானி சுப்பராயன் விசாரிக்கவுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...