காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆம்ஸ்ட்ராங் கொலை: கைதான மேலும் 3 பேர் சிறையிலடைப்பு

சிவசக்தி, கோகுல், விஜய் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :8 ஜூலை 2024, 5:13 am

DIN

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டவா்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனா்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே 8 பேர் கைதான நிலையில், இந்த கொலையில் தொடர்புடைய சிவசக்தி, கோகுல், விஜய் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மூவரையும் 19-ஆம் தேதி வரை சிறையிலடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குத் தொடா்பாக கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ரெளடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியைச் சோ்ந்த பொன்னை பாலு, அவா் கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூா் திருவேங்கடம், திருநின்றவூா் ராமு என்ற வினோத், அதே பகுதியைச் சோ்ந்த அருள், செல்வராஜ் உள்பட 11 போ் உடனடியாக கைது செய்யப்பட்டனா். காவல்துறை 10 தனிப்படைகளை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் உடல் திருவள்ளூா் மாவட்டம் பொத்தூரில் திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.