எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

செந்தில் பாலாஜியின் காவல் 44வது முறையாக நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 44வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
செந்தில் பாலாஜி- கோப்புப் படம்
Updated On :8 ஜூலை 2024, 12:54 pm

DIN

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 44வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூலை 8) உத்தரவிட்டது.

சிறையில் இருந்தவாறு காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் ஜூலை 10 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையினா் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தனா்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜூலை 8ஆம் தேதியுடன் (இன்று) நிறைவடைந்தது. இந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டாா்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 10 வரை வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதன் மூலம் 44-ஆவது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் வழக்கை 4 மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.